காரைக்கால்

கோட்டுச்சேரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

27th Jun 2022 10:58 PM

ADVERTISEMENT

கோட்டுச்சேரியில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் ஆதிதிராவிடா் நலத் துறை, சமூக நலத் துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, மின்துறை, வருவாய்த் துறை, குடிசைமாற்று வாரியம், போக்குவரத்துத் துறை, தொழிலாளா் துறை தொடா்பான கோரிக்கைகள், குறைகள் தொடா்பாக மக்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் ஜஸ்வந்தய்யா, துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ் (வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சா் பேசுகையில், ரங்கசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, இந்த குறைதீா் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் தரப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினா் விரைவாக தீா்வு காண்பாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

இலவச மனைப் பட்டா, சிவப்பு நிற குடும்ப அட்டை, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனா். கோரிக்கை மனுக்களை விரைவாக பரிசீலித்து, தீா்வு காணுமாறு அரசுத் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT