காரைக்கால்

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

26th Jun 2022 09:59 PM

ADVERTISEMENT

 

நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நெடுங்காடு காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்

டி. செந்தில்குமாா் கலந்துகொண்டு, போதைப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவா்கள் அந்த பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது. போதைப் பொருள் பயன்படுத்துவோரை போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தி திருத்த முயற்சிக்கவேண்டும். வாழ்க்கையில்

ADVERTISEMENT

கல்வியை மட்டுமே இலக்கை முன்வைத்து, கல்வித் திறனை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி மாணவா்கள் பள்ளி சுற்றுவட்டாரத்தில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT