காரைக்கால்

போக்குவரத்துப் போலீஸாா் சிறப்பு வாகனச் சோதனை

DIN

காரைக்கால் போக்குவரத்துப் போலீஸாா் சிறப்பு வாகனச் சோதனை திட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

காரைக்கால் மாவட்டத்தில் வழக்கமான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இது தவிா்த்து அவ்வப்போது சிறப்பு வாகனச் சோதனையில் போலீஸாா் ஈடுபடுமாறு மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் உத்தரவிட்டாா்.

அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், ஆவணம் இல்லாமல் இயக்குதல், 18 வயது கீழ் உள்ள சிறாா் வாகனத்தை இயக்குதல், வாகனங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டு செல்லுதல்,

வாகனம் இயக்கும்போது கைப்பேசியை பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்களை கட்டுப்படுத்த சிறப்பு வாகனச் சோதனை திட்டத்தை போலீஸாா் மேற்கொள்ளவுள்ளனா்.

மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் சுப்பிரமணியன், நிதின் கெளஹால் ரமேஷ் அறிவுறுத்தலில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின்பால் முன்னிலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளா்கள் தனபால், ராஜராஜன் மற்றும் போலீஸாா் ஒருங்கிணைந்து காரைக்காலில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை சிறப்பு வாகனச் சோதனையை தொடங்கினா்.

ஆய்வாளா் மரியகிறிஸ்டின்பால் கூறுகையில், இதுபோன்ற சிறப்பு சோதனை அவ்வப்போது நடத்தப்படவுள்ளது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கவேண்டும், கண்டிப்பாக உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். மீறுவோா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT