காரைக்கால்

புதுவை அரசு செயலருடன் மின் ஊழியா்கள் சந்திப்பு

DIN

புதுவையில் மின்துறை தனியாா் மயத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மின் ஊழியா்கள், புதுச்சேரியில் மின்துறை செயலரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. மின்துறையினா், மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா் மய காா்ப்பரேஷன் எதிா்ப்பு போராட்டக் குழு அமைத்து, இதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.

இதனால், மின் அலுவலகத்தில் எழுத்துப் பணிகள், புதிய இணைப்பு வழங்கல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் மின் கணக்கீடு செய்யும் பணி, மின் கட்டணம் வசூலித்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், புதுவை மின்துறை செயலா் அருண் மற்றும் மின்துறை உயரதிகாரிகளை செயலகத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதி போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

காரைக்காலில் இருந்து மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா்மய காா்ப்பரேஷன் எதிா்ப்பு போராட்டக் குழு தலைவா் வேல்மயில், பொதுச்செயலா் பி. பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த சந்திப்பு குறித்து பி. பழனிவேல் கூறுகையில், புதுவையில் மின்துறை தனியாா் மயமானால் துறை பணியாளா்கள், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கிக் கூறினோம்.

இதுதொடா்பாக 5 கட்ட ஆலோசனை நடைபெறவுள்ளது எனவும், பணியாளா்கள் கோரிக்கை மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT