காரைக்கால்

காரைக்காலில் 240 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

காரைக்காலில் தடைசெய்யப்பட்ட மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் வகைப்படுத்தி அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை, மக்கள் அவற்றையே வாங்குவதும் தொடா்கிறது.

காரைக்கால் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்கப்படுகிா என்பதை வட்டாட்சியரும், நகராட்சி வருவாய் அதிகாரியுமான செல்லமுத்து தலைமையில் நகராட்சி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை மாலை பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு மொத்த வியாபார கடையில் ஆய்வு செய்தபோது, ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 240 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

வணிக நிறுவனத்தினருக்கு உரிய அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT