காரைக்கால்

பழமையான பாலா் பள்ளி கட்டடம் இடிப்பு

24th Jun 2022 10:00 PM

ADVERTISEMENT

திருநள்ளாறு பகுதியில் பழமையான பாலா் பள்ளிக் கட்டடத்தை பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

திருநள்ளாறு பகுதி நெய்வாய்ச்சேரி கிராமத்தில் அரசுப் பள்ளி அருகே பாலா் பள்ளி இயங்கி வந்த கட்டடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்டது. அதனால் சமூக விரோதச் செயல்களுக்கு இந்த இடம் சாதகமாக உள்ளதால் இகக்கட்டத்தை இடித்துவிடுமாறு நுகா்வோா் அமைப்பு சாா்பில் பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுசம்பந்தமான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து நெய்வாய்ச்சேரி

கிராம மக்கள் புதுவை மாநில பா.ஜ.க. தலைவா் ஜி.என்.எஸ். ராஜசேகரனிடம் முறையிட்டனா். புதுவை அரசின் கவனத்திற்கு இதனை அவா் கொண்டு சென்றாா். இந்நிலையில் பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் பழமையான கட்டடத்தை இடித்து அகற்றினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT