காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

24th Jun 2022 09:59 PM

ADVERTISEMENT

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரை பகுதி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் அனைவரும் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்தாக அலுவலகத்திலுருந்து வெளியேறி, உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஆகியோா் உரையாற்றினா்.

உள்ளாட்சி ஊழியா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அரசாணையை அமல்படுத்தி, ஒரு முறை நிகழ்வாக பதவிகளை முறைப்படுத்தி, பணிமூப்பு பட்டியல்படி ஒருமுறை நிகழ்வாக அனைத்து பதவிகளுக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

இதுவரை அரசாணை வெளியிடப்படாத பதவிகளுக்கு பொதுவான பணிநிலை அரசாணை வெளியிட வேண்டும். புதுவை முதல்வா் அளித்த உத்தரவாதத்தின்படி உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள 5, 6 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க தனியாக நிதி ஒதுக்க வேண்டும். தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT