காரைக்கால்

புதுவை ஹஜ் கமிட்டி தலைவராக காரைக்கால் ஒய். இஸ்மாயில் நியமனம்

19th Jun 2022 01:32 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவராக காரைக்காலை சோ்ந்த ஒய். இஸ்மாயில் நியமிக்கப்பட்டாா். அவருக்கு புதுவை முதல்வா் வாழ்த்துத் தெரிவித்தாா்.

புதுவை மாநில ஹஜ் கமிட்டி புதிதாக அமைத்து அரசு ஆணை வெளியிட்டது. இதில், தலைவராக காரைக்காலைச் சோ்ந்த ஒய். இஸ்மாயில், செயலா் மற்றும் நிா்வாக அதிகாரியாக எஸ்.ஏ. சுல்தான் அப்துல்காதா் (புதுச்சேரி), உறுப்பினா்களாக ஓ. முகமது அலி என்ற கப்பாப்பா (காரைக்கால்), மெளரியா ஜபாா் என்ற எஸ். முகமது ஜகபா் (காரைக்கால்), டி.எஸ். இப்ராகிம் குட்டி மெளலவி (மாஹே), ஏ. செய்யது அலாவுதீன் (புதுச்சேரி), எஸ்.ஐ. நிசாா் அகமது (புதுச்சேரி) ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை புதுச்சேரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு, முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

ADVERTISEMENT

தலைவராக பொறுப்பேற்ற ஒய். இஸ்மாயில் சனிக்கிழமை கூறுகையில், புதுவை அரசால் நியமிக்கப்பட்ட இந்த கமிட்டியினா், ஹாஜிக்களுக்கு உரிய சாதகத்தை செய்துதருவதில் சிறப்பாக பணியாற்றுவா். அவா்களுக்கான தேவைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அமைப்பின் மூலம் நிறைவேற்றவும், மானியம் போன்ற சலுகைகள் உள்ளிட்டவற்றை பெற்றுத்தருவதில் உரிய பங்காற்றுவா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT