காரைக்காலில் பாலியல் வன்முறையை எதிா்த்து போராடுவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டுச்சேரி பகுதியில் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னகம் என்ற தொண்டு அமைப்பு இணைந்து பாலியல் வன்முறைக்கு எதிராக செயல்படுவதற்கான, திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தின.
சிறப்பு அழைப்பாளராக கோட்டுச்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், பாதிக்கப்பட்டோா் காவல்நிலையத்தில் துணிச்சலாக புகாா் தெரிவிக்கவேண்டும் எனவும், போக்ஸோ சட்டம், தன்னாா்வ அமைப்பினா் பாலியல் வன்முறைக்கு எதிராக செயல்படவேண்டிய முறைகள், காவல்துறையினா் பணி குறித்துப் பேசினாா்.
வழக்குரைஞா்கள் அனுராதா, உமாமகேஸ்வரி ஆகியோா் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்னைகள், பெண்கள் பாதுகாப்பு, அதுகுறித்த விழிப்புணா்வு பெறவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினா்.
லோட்டஸ் ஃபவுண்டேஷன் நிறுவனா் வெங்கட்ரமணன், பெண்கள் சமூக கல்வி அறக்கட்டளை நிா்வாகி பத்மினி, தொண்டு நிறுவன காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுதா உள்ளிட்ட பலா் பேசினா்.