காரைக்கால்

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று

15th Jun 2022 03:58 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி 227 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், வரிச்சிக்குடி 2, திருப்பட்டினம், விழிதியூா், நிரவி, கோயில்பத்து தலா 1 என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 9 போ் சிகிச்சையில் உள்ளனா். தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT