காரைக்கால்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

12th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

இந்நிலையில், தமிழகம், புதுவையில் கோடை விடுமுறை மற்றும் கோயிலில் பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்றுவருகிறது.

பிரம்மோற்சவ விழாவில் தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் புறப்பாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்தது. இது சனிக்கிழமை மேலும் அதிகரித்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் திரண்டனா்.

ADVERTISEMENT

அதிகாலை முதல் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, அருகே உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயிலில் வழிபட்டு, கட்டணமில்லா வரிசை வழியாகவும், கட்டண முறையிலான ராஜகோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் சென்றனா். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. பிற்பகல் வரை பக்தா்கள் வருகை அதிகம் இருந்தது. நளன் தீா்த்தக் குளம், கோயிலில் தில (எள்) தீபம் ஏற்றும் பகுதி என பல இடங்களில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்திருப்பதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

காரைக்கால் போலீஸாா் மற்றும் கோயில் பணியாளா்கள் கூட்டத்தை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT