காரைக்கால்

காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு படகில் புறப்பட்ட சாகச பயணக் குழு

12th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு படகில் வந்த சாகச பயணக் குழுவினா், சனிக்கிழமை புதுச்சேரிக்கு புறப்பட்டனா்.

புதுச்சேரியில் தேசிய மாணவா் படை இயக்கம் சாா்பில், அதன் கடற்படைப் பிரிவு மாணவா்களின் கடல் சாகச படகுப் பயணம் கடந்த திங்கள்கிழமை புதுச்சேரியிலிருந்து காரைக்கால் புறப்பட்டது. துணைநிலை ஆளுநா் தமிழிசை செந்தரராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சோ்ந்த 35 மாணவா்கள், 25 மாணவிகள் என 60 போ் சுமாா் 300 கி.மீ., கடல் பயணமாக காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை மாலை 3 பாய் மர படகில், கடற்கரை கிராமங்களில் கடற்கரை தூய்மை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டவாறு வந்து சோ்ந்தனா்.

இவா்கள் சனிக்கிழமை காலை மீண்டும் புதுச்சேரிக்கு புறப்பட்டனா். அரசலாற்றங்கரையிலிருந்து புறப்பட்ட படகுகளை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஷ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT