காரைக்கால்

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு இன்றுமுதல் இலவச அரிசி

12th Jun 2022 10:07 PM

ADVERTISEMENT

 

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 13) முதல் இலவச அரிசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி (ஏப்ரல், மே மாதங்களுக்கானது) வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 2 மாதங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி - திருப்பட்டினம் தொகுதிகளில் ஜூன் 13 முதல் 15-ஆம் தேதி வரை, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு தொகுதிகளில் 16 முதல் 18-ஆம் தேதி வரை வழங்கப்படும். மேலும் எண் 34, 35 கடைகளுக்கான அரிசி, காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு 6-இல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT