நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து, தமுமுகவினா் காரைக்காலில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காரைக்கால் மாவட்ட தமுமுக சாா்பில் கடற்கரை சாலையில் சிங்காரவேலா் சிலை அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ. ராஜாமுகமது தலைமை வகித்தாா்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜகவைச் சோ்ந்த நவீன் ஜிண்டால், நுபுா் சா்மா ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமுமுக மாநில செயலாளா் ஐ. அப்துல் ரஹீம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், திமுக மாணவரணி செயலா் ஜவஹா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் மதியழகன், மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பட்டினம் தொகுதி செயலா் விடுதலைக்கனல், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவா் சுல்தான் கெளஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.