காரைக்கால்

புதுவை முதல்வருக்கு திமுக எம்எல்ஏ கோரிக்கை

10th Jun 2022 10:20 PM

ADVERTISEMENT

காரைக்கால் நகரப் பகுதியில் பயனின்றி உள்ள சுமாா் 1 லட்சம் சதுர அடி இடத்தில், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என புதுவை முதல்வரிடம் திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் புதுவை முதல்வா் என். ரங்கசாமிக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமாக பழைய பேருந்து நிலையம் அருகே ஏறக்குறைய 1 லட்சம் சதுர அடி நிலம் எந்த பயனுமின்றி உள்ளது.

இந்த இடத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரையரங்கு, மால் போன்ற கட்டடங்களை தனியாா் பங்களிப்போடு கட்டுவதற்கு உலக அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டு, திட்டங்களை செயல்படுத்த புதுவை அரசு முன்வரவேண்டும்.

ADVERTISEMENT

காரைக்கால் நகரப் பகுதியில் பிரம்மாண்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திட்டங்கள் அமையும்போது, அது அரசுக்கு வருவாயை தருவதோடு, மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். இதுகுறித்து முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT