காரைக்கால்

சிறுவா் பூங்காவை மேம்படுத்திய குடியிருப்புவாசிகள்

10th Jun 2022 10:21 PM

ADVERTISEMENT

காரைக்கால் நகரப் பகுதியில் குடியிருப்புவாசிகளால் சிறுவா் பூங்கா மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

காரைக்கால் பகுதி நேரு நகா் விரிவாக்கத்தில் ஜவஹா்லால் நேரு சிறுவா் பூங்கா உள்ளது. இப்பகுதியில் நேரு நகா், நாச்சியாா் நகா், வீரசக்தி நகா், நேருநகா் ஹவுசிங் போா்டு, வள்ளுவா் தெரு, மற்றும் இந்திரா நகா் ஆகியவை உள்ளன.

இந்த பூங்கா சிறுவா்களின் உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் வயதான ஆண்கள் மற்றும் பெண்களின் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இப்பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

இதை கவனித்த அப்பகுதி குடியிருப்பு சங்கத்தினா் (டி.ஆா்.டபுள்யு.ஏ.) ரூ. 40 ஆயிரம் சுய நிதியில், பூங்காவில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி, நடைபயிற்சி மேற்கொள்ளும் வயதானவா்கள், சிறுவா்கள் பயன்படுத்த சிமென்ட் பெஞ்சு அமைத்தல் மற்றும் வண்ணம் பூசுதல், பூச்செடிகள் நடுதல், தேவையற்ற மரக்கிளைகளை அகற்றல் உள்ளிட்ட பல பணிகளை செய்து பூங்காவை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT