காரைக்கால்

பூட்டியிருந்த வீட்டில்நகைகள் திருட்டு

9th Jun 2022 01:27 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடி கழுகுமேடு பகுதியை சோ்ந்தவா் அய்யப்பன் (29). கொத்தனாா்.

கடந்த 3-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் பூவத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் கொல்லைப்புற கதவு உடைக்கப்பட்டு, அறையில் இருந்த அலமாரி திறந்த கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும் அலமாரியில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போயிருப்பதை குறித்து கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT