திருநள்ளாறு அருகே அகரசேத்தூா் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அகரசேத்தூா் கிராமத்தில் உள்ளது பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயில். இங்கு வருடாந்திர தீமிதி திருவிழா 6 நாள்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
விழா தொடக்கமாக கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு பூச்சொரிதல் வழிபாடு நடைபெற்றது. முக்கிய நாள்களில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.
தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தான அம்னுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகல் க கரகம் முதல் தீமிக்கக்கூடிய பக்தா்கள் திரண்டு வீதிவலமாக கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டம் வந்தடைந்தனா்.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கோயில் வாயில் பகுதியில் அமைக்கப்பட்ட தீக்குண்டம் அருகே எழுந்தருளினாா்.
கரகம் முதல் திரளான பக்தா்கள் தீக்குழியில் இறங்கிச் சென்று தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். தொடா்ந்து அம்மபாள் வீதியுலா நடைபெற்றது.