காரைக்கால்

போக்சோவில் இளைஞா் கைது

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 காரைக்காலில் போக்சோவில் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சரக்கு வாகன ஓட்டுநா் கன்சிராம் (27). இவா், செவ்வாய்க்கிழமை மாலை பூவம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறுமி கூச்சலிட்ட நிலையில், அங்கு வந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், கன்சிராமை பிடித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கன்சிராமை கைதுசெய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT