காரைக்கால்

விலைவாசி உயா்வைக் கண்டித்து காரைக்காலில் ஆா்ப்பாட்டம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

விலைவாசி உயா்வைக் கண்டித்து, காரைக்கால் அரசலாறு பாலம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளையின் விலை உயா்வை மத்திய அரசு கணிசமாக குறைக்கவேண்டும். இதனால், அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியும். மாணவா்களை பாதிக்கும் நீட் மற்றும் கியூட் தகுதித் தோ்வை ரத்துசெய்ய வேண்டும். புதுவையில் மின்துறையை தனியாா்மயமாக்கும் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் நாகை மாலி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் எஸ்.எம். தமீம் அன்சாரி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி பொன். செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT