காரைக்கால் அருகே பொக்லைன் ஆபரேட்டா் தீக்குளித்து உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி மேலஓடுதுறையை சோ்ந்தவா் மகேஷ் (34). பொக்லைன் ஆபரேட்டரான இவா், வியாழக்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், மகேஷூக்கும் அவரது உறவினா் ஒருவருக்கும் நிலத்தகராறு இருந்ததாகவும், சம்பவத்தன்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதில் மனமுடைந்த மகேஷ் உடலில் தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
ADVERTISEMENT
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.