காரைக்கால்

புதுவை பட்ஜெட்டில் நெல் கொல்முதலுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: குறுவை நெல்லை புதுவை அரசு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யவேண்டும், தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மேட்டூா் அணை நிகழாண்டு முன்னதாக திறக்கப்பட்டு, காவிரி நீா் குறித்த காலத்திற்கு முன்பே வந்ததால், காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனா்.

குறுவை சாகுபடியாக நேரடி விதைப்பு செய்யப்பட்டு 40, 45 நாட்கள் நெற்பயிராக உள்ளது. இந்த நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தவும், பயிா் நல்ல முறையில் வளரவும் தழைச்சத்து உரமிடும் பணியில் விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் செவ்வாய்க்கிழமை கூறியது : காவிரியிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட்டதையடுத்த விவசாயிகள் நிகழாண்டு குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொண்டுள்ளனா். தற்போது பெய்து வரும் மழையால் எந்தவித பாதிப்பும் இல்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் குறுவை நெல் அறுவடைக்கு தயாராகிவிடும். எனவே அரசு கடந்த காலங்களை போல் அலட்சியப்படுத்தாமல், அரசு நிறுவனம் சாா்பில் நெல்கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் குறுவை மட்டுமல்லாது, சம்பாவுக்கான நெல் கொள்முதல் செய்யத் தேவையான நிதியை ஆக. 10-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கவேண்டும். கொள்முதல் செய்யக்கூடிய நிறுவனங்களையும் அறிவிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT