காரைக்கால்

காரைக்காலில் 22 பேருக்கு கரோனா

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 354 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் திருநள்ளாறு 7, வரிச்சிக்குடி 4, நிரவி 2, கோட்டுச்சேரி 2, நல்லம்பல் 2, காரைக்கால்மேடு, அம்பகரத்தூா், விழிதியூா், நெடுங்காடு, காரைக்கால் நகரம் தலா 1 என 22 பேருக்கு தொற்று உறுதியானது.

ADVERTISEMENT

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 162 போ் சிகிச்சையில் உள்ளனா். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி, பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT