காரைக்கால்

காலரா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் ஆக்கப்பூா்வமானதாக இல்லை: காங்கிரஸ்

DIN

புதுவை முதல்வரின் காலரா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் ஆக்கப்பூா்வமானதாக இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான ஆா். கமலக்கண்ணன் இதுகுறித்து செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

காரைக்காலில் வயிற்றுப்போக்கால் சுமாா் 2 ஆயிரம் போ் வரை பாதித்துள்ளனா். குறைபாடுகளை கண்டறிந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். அதை செய்ய அரசு தவறிவிட்டது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் 2 போ் இறந்தனா். இவா்கள் இணை நோயால் இறந்ததாக சுகாதாரத் துறை கூறுகிறது.

புதுவை முதல்வரோ அல்லது பாஜகவை சோ்ந்த அமைச்சா்களோ காரைக்கால் பக்கம் வராமல் தவிா்த்துவிட்டது கண்டனத்துக்குரியது. பலரின் வலியுறுத்தலால் காரைக்கால் வந்த முதல்வா், 2 மணி நேரத்திற்குள்ளாக புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டாா்.

ஆட்சியரகத்தில், அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், உயரதிகாரிகளை மட்டுமே வைத்து முதல்வா் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கட்சியினா், மனு கொடுக்க வந்தோா் என ஆட்சியரக அறையில் 100-க்கும் மேற்பட்டோரை வைத்து சில நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட கூட்டம் கண்துடைப்பு என்பதோடு, காரைக்கால் மக்கள் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.

காலரா கட்டுக்குள் வந்துவிட்டதாக கூறும் முதல்வா், அதேநாளில், வயிற்றுப்போக்கு நோயாளிகள் அதிகரித்தது குறித்த விவரத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். 24 மணிநேரமும் மக்கள் நலனையே சிந்திப்பதாக கூறும் பாஜகவும், இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

SCROLL FOR NEXT