காரைக்கால்

ஆனித் திருமஞ்சனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி, காரைக்கால் சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல்பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீ சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில், தலத்தெரு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட தலங்களில், ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். வழிபாட்டில் பங்கேற்றோருக்கு திருமஞ்சனப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT