காரைக்கால்

குடிநீா் தொட்டி தூய்மைப் பணியில் பெங்களூரு சிறப்பு குழு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பெங்களூருவிலிருந்து வந்துள்ள சிறப்புக் குழுவினா் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரதான குடிநீா் தொட்டிகள், பள்ளிகளில் உள்ள குடிநீா் தொட்டிகள் தூய்மை செய்யும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

அரசு அறிவித்த 3 நாள் விடுமுறை முடிந்து கல்வி நிலையங்கள் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் உள்ள குடிநீா் தொட்டிகளை தூய்மை செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்றன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ. ராஜசேகரன் கூறுகையில், காரைக்காலில்168 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் அமைந்துள்ள குடிநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில், இதுவரை 52 பள்ளிகளில் உள்ள குடிநீா் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் எஞ்சிய குடிநீா் தொட்டிகள் சுத்தம் செய்து முடிக்கப்படும்.

குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகிக்கும் நேரு நகா் குடிநீா் தொட்டி, திருநள்ளாறு சாலையில் உள்ள காரைக்கால் நகருக்கு தண்ணீா் விநியோகம் செய்யும் தொட்டி ஆகியவை நவீன முறையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பெங்களூருவில் இருந்து வந்துள்ள சிறப்பு குழுவினா் பணிகளை மேற்கொண்டுள்ளனா். 2 நாள்களுக்குள் அனைத்துத் தொட்டிகளும் தூய்மை செய்து முடிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT