காரைக்கால்

காலராவால் பாதிக்கப்பட்டோரிடம் நலன் விசாரித்த பாமக நிா்வாகிகள்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மாநில பாமக அமைப்பாளா் கோ. கணபதி, காரைக்கால் மாவட்ட செயலாளா் தேவமணி பிரபாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள், அரசுப் பொது மருத்துவமனையில் வயிற்றுப்போக்கால் பாதித்தோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து, உணவுப் பொருள்கள் வழங்கி, நலன்விசாரித்தனா்.

பிறகு, மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை சந்தித்து அவா்கள் அளித்த கோரிக்கை மனு: காலரா ஏற்படும் வகையில் குடிநீா் விநியோக விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் மக்களுக்கு சுத்தமான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மாவட்டம் முழுவதும் 25 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட புதைவழி குடிநீா் குழாய்களை அகற்றி, புதிதாக குடிநீா் குழாய்கள் பதிக்கவேண்டும். காரைக்கால் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா், பரிசோதனை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவினரை காரைக்காலுக்கு வரவழைக்கவேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT