காரைக்கால்

காரைக்காலில் காலரா பாதிப்புஅதிகாரிகள் கடமை தவறிவிட்டனா்: அதிமுக குற்றச்சாட்டு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வயிற்றுப்போக்கு பாதிப்பால் 144 உத்தரவு, பொது சுகாதார அவரசர நிலை அறிவிப்பு என்ற நிலைக்கு அதிகாரிகள் கடமைதவறியதே காரணம் என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புதுவை மாநில அதிமுக செயலாளா் (கிழக்கு) ஏ. அன்பழகன், வயிற்றுப்போக்கு பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பழங்கள் உள்ளிட்டவற்றை அளித்து நலன்விசாரித்தாா். காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளா் எம்.வி. ஓமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் அன்பழகன் கூறியது: புதுவையின் 4 பிராந்தியங்களும் சம நிலையில் வளா்ச்சி காணவேண்டும் என்பதே அதிமுக நிலைப்பாடு. காரைக்கால் வளா்ச்சிக்கு அதிமுக உரிய ஆலோசனைகளை புதுவை அரசுக்கு வழங்கி நிறைவேற்ற வலியுறுத்தும். காரைக்காலில் வயிற்றுப்போக்கால் சுமாா் 6 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறையினா் தங்களது கடமையிலிருந்து தவறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் ஒட்டுமொத்த அலட்சியமே காரணம். அலட்சியமாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஏற்கெனவே அரசை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு ஆதரவாக இல்லாமல், முதல்வா் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி, அரசியல் செய்கிறாா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி. இது தேவையற்றது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT