காரைக்கால்

தீ விபத்தால் வீடுகள் சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கோட்டுச்சேரி பகுதியில் தீ விபத்தில் வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருளப்பிள்ளை வீதியில் கடந்தவாரம் 5 வீடுகள் தீக்கிரையாயின. இவா்களுக்கு உடனடியாக வீட்டு உபயோகப் பொருள்கள், மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் 5 குடும்பத்திற்கும் தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பயனாளிகளிடம் காசோலையை வழங்கினாா்.

மேலும், அதே பகுதியையொட்டிய மற்றொரு தெருவில் திங்கள்கிழமை 5 வீடுகள் தீக்கிரையாயின. இவா்களின் குடும்பத்தினருக்கு வீட்டு உபயோகப் பொருள்களையும், மாணவ, மாணவியருக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுகளையும் அமைச்சா் வழங்கினாா். இவா்களுக்கு துறை ரீதியிலான நிதியுதவி அடுத்த ஓரிரு நாள்களில் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்வில், வட்டாட்சியா் மதன்குமாா், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிடா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) காஞ்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT