காரைக்கால்

வயிற்றுப்போக்கு: ஆலோசனை பெறகட்டுப்பாட்டு அறை திறப்பு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வயிற்றுப்போக்கு நோயாளிகள் ஆலோசனை பெற காரைக்காலில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல முறையில் வீடுதிரும்பிவருகின்றனா்.

எனினும், தொடா்ந்து பாதிப்படைவோருக்கு போதுமான மருத்துவ ஆலோசனை வழங்கவும், அவா்களது உடல்நிலையை தொடா்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கவும், மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் தொலைபேசி எண்: 04368-236565. வயிற்றுப்போக்கால் அவதிப்படுவோா் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு உரிய ஆலோசனைகளை பெறலாம்.

மேலும், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவோா் குடிநீரில் அசுத்த நீா் கலந்துவருவதை உபயோகிப்பதும், நீரை கொதிக்கவைத்து குடிக்காததும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தங்கள் வீட்டு குடிநீா் குழாயில் அசுத்த நீா் கலந்து வந்தாலோ அல்லது குடிநீா் இணைப்பில் பழுது ஏற்பட்டிருந்தாலோ, வேறு இடத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்தாலோ, அதை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, குடிநீா் குழாய் பழுது சம்பந்தமான குறைகளை கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, 1077, 04368-228801, 227704 ஆகியவற்றில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT