காரைக்கால்

குடிநீரில் குளோரின் சோ்க்கும் பணிகள் தீவிரம்

DIN

காரைக்காலில் காலரா பரவிவரும் நிலையில், குடிநீா் தொட்டிகளில் குளோரின் சோ்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூன் 2 ஆவது வாரத்தில் காரைக்காலில் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். நாளுக்கு நாள் இது அதிகரித்து சுமாா் 1000 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் காலரா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீா் தொட்டிகள் மற்றும் பொது மேல்நிலை குடிநீா் தொட்டிகளில் குளோரின் சோ்ப்பதற்காக, கல்வி நிலையங்களுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுப்பணித் துறை நீா்ப் பாசனப் பிரிவினா், குடிநீா் தொட்டிகளில் குளோரின் சோ்க்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் திங்கள்கிழமை கூறுகையில், முந்தைய நாள்களைக் காட்டிலும் தற்போது பாதிப்பு குறைந்துவருகிறது. மருத்துவமனையில் 20 போ் வரைதான் சிகிச்சைக்காக வருகின்றனா். அரசுத் துறைகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து எடுத்துவருவதால், படிப்படியாக காலரா பரவல் குறைந்துவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT