காரைக்கால்

காரைக்கால் இயல்பு நிலையில்தான் உள்ளது: அமைச்சா் சந்திர பிரியங்கா

DIN

காரைக்கால் இயல்பு நிலையில் உள்ளதாக புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கூறினாா்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை திங்கள்கிழமை பாா்த்து விவரங்களை கேட்டறிந்த அவா், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

காரைக்காலில் பரவலாக வயிற்றுப்போக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டவா்கள் தங்களுக்கு காலராதான் என அச்சம்கொண்டுள்ளனா். மருத்துவமனைக்கு வந்ததும் ஓரிரு நாள்களில் குணமடைந்துவிட்டால் இது சாதாரணமானதுதான். நீடித்தால் மட்டும் காலராவாக கருதப்படுகிறது. இங்கு வருவோருக்கு ஓஆா்எஸ் பவுடா் கொடுக்கும்போது அனைவரும் குணமடைந்து செல்கின்றனா். எனவே, மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.

கரோனா காலத்தில் எவ்வாறு தூய்மையை கடைப்பிடித்தோமோ, அதேபோல, அனைத்திலும் சுத்தத்தை கடைப்பிடித்தால் இதுபோன்ற பாதிப்பு வரவாய்ப்பில்லை. 144 உத்தரவு என்பது சில சீரமைப்புகளை செய்யத்தான். மக்கள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. மக்கள் கூடுவதற்கு தடை என்று இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. குடிநீா் தொட்டிகளில் குளோரின் சோ்க்கப்படுகிறது. நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதும் குறைந்துள்ளது. எனவே, காரைக்கால் இயல்புநிலையில்தான் உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோடல் அதிகாரி மருத்துவா் எம். மோகன்ராஜ், மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT