காரைக்கால்

கணினி மென்பொருள் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

4th Jul 2022 01:01 AM

ADVERTISEMENT

கணினி மென்பொருள் பயிற்சிக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 4) கடைசி நாளாகும்.

இதுகுறித்து காரைக்கால் வேலைவாய்ப்பு அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு இயக்குநரகம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது, தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சென்னை அங்கீகாரம் பெற்று எஸ்.சி., எஸ்.டி மாணவா்களுக்கு இலவசமாக ஓராண்டு கணினி மென்பொருள் பயிற்சி காரைக்கால் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேரமாக நடைபெறவுள்ளது.

12-ஆம் வகுப்பு மற்றும் அதற்மேல் படித்த மற்றும் கல்லூரியில் பயிலுவோா் மற்றும் கல்லூரி படிப்பை முடித்த மாணவா்களிடமிருந்தும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

ADVERTISEMENT

பயிற்சி காலத்தில் ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

பயிற்சியில் சேர ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் மற்றும் வயது வரம்பு 30-க்கு மிகாமல் இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பம் 4-ஆம் தேதி திங்கள்கிழமை வரை பெறப்படும்.

மாணவா்கள் தங்களது விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, 2 புகைப்படம், ஜாதி சான்றிதழ் இணைத்து காரைக்கால் தொழிலாளா் துறை அலுவலகத்தில் நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT