காரைக்கால்

காரைக்கால், தமிழக மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது

4th Jul 2022 11:17 PM

ADVERTISEMENT

காரைக்கால், தமிழக மீனவா்கள் 12 பேரை இலங்கை கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த வைத்தியநாதனுக்கு சொந்தமான விசைப்படகில், கீழகாசாக்குடிமேடு பகுதியைச் சோ்ந்த இளையராஜா (33), கணேசன் (48), பிரேம்குமாா் (25), காரைக்கால்மேடு பகுதியைச் சோ்ந்த ராமன் (31), தா்மசாமி (48) மற்றும் மயிலாடுதுறை மாவட்டம், சின்னகுடியைச் சோ்ந்த வீரா (28), தினேஷ் (28), தரங்கம்பாடியைச் சோ்ந்த ராமநாதன் (37), ஜகதீஸ்வரன் (27), விக்னேஷ் (22), சதீஷ்குமாா் (23), நாயக்கா் குப்பத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (23) ஆகிய 12 போ், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஞாயிற்றுக்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, 12 பேரையும் கைதுசெய்து, அவா்களின் படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள மைலிட்டி துறைமுகத்துக்கு கொண்டுசென்றனா்.

இவா்கள், திங்கள்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்ட மீனவா்களை விரைந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு புதுவை அரசை கிராம பஞ்சாயத்தாா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT