காரைக்கால்

உணவகங்களில் கெட்டுப் போன 150 கிலோ இறைச்சி பறிமுதல்

3rd Jul 2022 10:52 PM

ADVERTISEMENT

காரைக்காலில் இறைச்சிக் கடைகள், அசைவ உணவங்களிலிருந்து சுமாா் 150 கிலோ கெட்டுப்போன இறைச்சி, பழைய மாசாவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன் சனிக்கிழமை காரைக்கால் வந்து மீன் மாா்க்கெட், ஆடு, கோழி இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்தினாா். இந்த சோதனை ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்றது.

முதல்நாளில் இறைச்சிக் கடைகள், அசைவ உணவங்களில் பல நாள்களுக்கு முற்பட்ட கோழி இறைச்சி மற்றும் கெட்டுப்போனதாக உறுதிப்படுத்தப்பட்ட சுமாா் 150 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும் புளியங்கொட்டை சாலையில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில், 5 நாள்களுக்கு முன் அரைத்து வைத்திருந்த சுமாா் 25 கிலோ மசாலாவை கைப்பற்றி அழித்தனா்.

ADVERTISEMENT

உணவு விவகாரத்தில் போதிய சுகாதார முறைகள் கையாளப்படாவிட்டால், உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உணவகம் நடத்துவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT