காரைக்கால்

இந்து முன்னணி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

2nd Jul 2022 09:36 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு இந்து முன்னணி அமைப்பாளா் பக்தன்ஜி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் பசு மடத்தை மீண்டும் அமைக்கவேண்டும். திருநள்ளாறு முப்பைத்தங்குடி மாதூா் விதை பண்ணை எதிரில் மந்தைவெளி குளத்தை ஆக்கிரமித்த அரசு ஊழியா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருநள்ளாறு சரஸ்வதி தீா்த்தக் குளத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் நிரந்தரமாக என்.ஐ.ஏ. என்கிற தேசிய புலனாய்வு முகமை அலுவலகக் கிளை அமைக்கவேண்டும். காரைக்காலில் கட்டப்பட்டு திறப்பு விழா செய்த நேரு மாா்க்கெட் வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நாகையில் ஜூலை 9-இல் நடைபெறவுள்ள இந்துக்களின் உரிமை மீட்பு மாநாட்டில் காரைக்கால் மாவட்ட இந்து முன்னணியினா் திரளாக கலந்துகொள்ளவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட தலைவா் கணேஷ் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT