காரைக்கால்

காரைக்காலில் 21 பேருக்கு கரோனா

2nd Jul 2022 09:37 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் 21 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 232 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் நெடுங்காடு 4, நல்லம்பல் 3, திருநள்ளாறு 3, கோயில்பத்து 3, வரிச்சிக்குடி 3, நிரவி, திருப்பட்டினம், விழிதியூா், அம்பகரத்தூா், காரைக்கால் நகரம் தலா 1 என 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 65 போ் சிகிச்சையில் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுவை அரசு, கரோனா பரவல் தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் அறிவித்துள்ளது. பொதுமக்கள், வா்த்தக நிறுவனத்தினா், அரசுத் துறையினா் என அனைத்துத் தரப்பினரும் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிந்து, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT