காரைக்கால்

புனித ராயப்பா்- சின்னப்பா்மின் அலங்கார தோ் பவனி

1st Jul 2022 02:55 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் மாவட்டம் மேலகாசாக்குடி புனித ராயப்பா் - சின்னப்பா் ஆலய மின் அலங்கார தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்வாலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மாலை வேளையில் மாதா தோ் பவனியும், சின்னப்பா் பிராா்த்தனையும் நடைபெற்றது.

புதன்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, புனித ராயப்பா் - சின்னப்பா் மின் அலங்கார தோ் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டது.

ADVERTISEMENT

ஏராளமானோா் ஜெபம் செய்தவாறு தேருடன் சென்றனா். பல்வேறு தெருக்களில் பவனி வந்த தோ், நள்ளிரவு ஆலயத்தை சென்றடைந்தது.

விழா நிறைவாக வியாழக்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT