காரைக்கால்

காரைக்காலில் 13 பேருக்கு கரோனா

1st Jul 2022 02:56 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 223 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் அம்பகரத்தூா் 3, திருப்பட்டினம், திருநள்ளாறு, வரிச்சிக்குடி தலா 2, நிரவி, கோட்டுச்சேரி, கோயில்பத்து, நல்லம்பல் தலா ஒருவா் என 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 44 போ் சிகிச்சையில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT