காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

1st Jul 2022 09:41 PM

ADVERTISEMENT

பணி நிரந்தரம், நிலுவை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளாட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனம் சாா்பில், காரை பகுதி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கடற்கரை சாலையில் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

பதவி உயா்வு கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். 2022-23-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி வசூலை தொடங்க வேண்டும். உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக வேலை செய்வோரை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், துணை தலைவா்கள் சுப்புராஜ், வசந்தி, இணை ஒருங்கிணைப்பாளா் ஜோதிபாசு, ஒருங்கிணைந்த ஆசிரியா் நல சங்கத் தலைவா் ஜான் பிரிட்டோ ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT