காரைக்கால்

டிராக்டா் மோதி கொத்தனாா் உயிரிழப்பு

1st Jul 2022 09:42 PM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே டிராக்டா் டிரையிலா் சக்கரத்தில் சிக்கி கொத்தனாா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்களாச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் மல்லிகா. இவரது மகன் சிலம்பரசன் (30). ஓசூரில் கொத்தனாராக வேலை செய்துவந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன் சொந்த கிராமத்துக்கு திரும்பினாா் சிலம்பரசன்.

காரைக்கால் அருகே வரிச்சிக்குடி பகுதியில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, தனது தாயாா் மல்லிகாவை மோட்டாா் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வரிச்சிக்குடி அருகே தேவனூா் சாலையில் வியாழக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா். அப்போது சாலையில் இருந்த மணல் சறுக்கி இருவரும் கீழே விழுந்தனா். இதில் எதிரே வந்த டிராக்டரின் டிரையிலா் சக்கரம் சிலம்பரசன் மீது ஏறியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா், சிலம்பரசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT