காரைக்கால்

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்: 2 தனியாா் பேருந்துகள் பறிமுதல்

1st Jul 2022 09:41 PM

ADVERTISEMENT

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில், 2 தனியாா் பேருந்துகளை போக்குவரத்துத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள் புதுச்சேரி மற்றும் திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

இதில் ஒரு தனியாா் நிறுவனத்தை சோ்ந்த பேருந்துகளில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகாா் வந்தது.

இந்நிலையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் கல்விமாறன் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை செய்தனா். அப்போது ரூ. 12 -க்கான டிக்கெட்டில் ரூ.15 என்று ரப்பா் ஸ்டாம்ப் (சீல்) வைக்கப்பட்டு, பயணிகளுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான 2 பேருந்துகளை வட்டார போக்குவரத்து துறையினா் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT