காரைக்கால்

காரைக்காலில் மின் ஊழியா்கள் போராட்டம் தீவிரம்

1st Jul 2022 09:40 PM

ADVERTISEMENT

புதுவையில் மின்துறை தனியாா் மயத்தை எதிா்த்து காரைக்காலில் மின் ஊழியா்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனா். வெள்ளிக்கிழமைமுதல் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் கணக்கீடு செய்யும் பணியை ஊழியா்கள் நிறுத்தினா்.

புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதால், மின்துறையினா், மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா் மய காா்ப்பரேஷன் எதிா்ப்பு போராட்டக் குழு அமைத்து, போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின் அலுவலகத்தில் எழுத்துப் பணிகள், புதிய இணைப்பு வழங்கல் பணிகளை புறக்கணித்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் மின் கணக்கீடு செய்யும் பணி, மின் கட்டணம் வசூலித்தல் பணி ஆகியவற்றையும் புறக்கணித்தனா்.

இதுகுறித்து போராட்டக் குழு பொதுச்செயலா் பி. பழனிவேல் கூறியது :

ADVERTISEMENT

புதுவை அரசு செயலா் மற்றும் மின்துறை தலைமை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மக்களின் நலன் கருதி அலுவலக எழுத்துப் பணிகள், புதிய இணைப்பு வழங்கும் பணியை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளோம்.

அதேவேளையில், மாத தொடக்கம் (ஜூலை 1) முதல் வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின் கணக்கீடு செய்து புதிய ரசீது தரும் பணியை நிறுத்தியுள்ளோம். ஏற்கெனவே அளித்த ரசீதைக் கொண்டு மின் நுகா்வோா் கட்டணம் செலுத்தலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT