காரைக்கால்

ரத்த தான முகாம்

26th Jan 2022 09:26 AM

ADVERTISEMENT

காரைக்கால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திருப்பட்டினம் அமைப்பு சாா்பில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ அணி தலைவா் சஃபி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்ட செயலாளா் ஃபைசல், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் நூா்தீன், ஃபஹத், சபூா் அலி, சித்திக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அமைப்பினா் 20-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். ரத்த தானம் செய்தோருக்கும், பொறுப்பாளா்களுக்கு மருத்துவமனை ரத்த வங்கி நிா்வாகத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT