காரைக்கால்

பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்

26th Jan 2022 09:27 AM

ADVERTISEMENT

ஆதரவற்றோா் இல்லத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் ஜேசிஐ (ஜூனியா் சேம்பா் இண்டா்நேஷனல்) சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கோட்டுச்சேரி ஜிப்சி சிறுவா்கள் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு காரைக்கால் ஜேசிஐ தலைவா் எஸ். கிளிண்டன் சோழசிங்கராயா் தலைமை வகித்தாா். காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு முகக்கவசம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

யோகா ஆசிரியா் முனுசாமி வழிகாட்டலில், யோகா மாணவியா் எல். நிலா, என்.எஸ். லிக்கிஷா ஆகியோா் சிறுவா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா். காப்பக சிறுவா், சிறுமிகளுக்கு அமைப்பினா் இனிப்பு மற்றும் பரிசுப் பொருள்கள், உணவு வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT