காரைக்கால்

வாக்காளா் தின பொன் மொழிகள் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

19th Jan 2022 08:58 AM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பொன் மொழிகள் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட துணை தோ்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, பொன் மொழிகள் எழுதுதல் போட்டி நடைபெறவுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க தோ்தல்களை உருவாக்குவோம் என்ற தலைப்பில், தங்களால் உருவாக்கும் பொன்மொழியை 10 வாா்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, வெள்ளைத் தாளில் (ஏ4 அளவு) தனி உறையில் வைத்து, என். நளினா, உதவி பேராசிரியா், அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி காரைக்கால் - கைப்பேசி - 9952790881 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ 21-ஆம் தேதி 5 மணிக்குள் அனுப்பவேண்டும். சிறந்த படைப்பை அனுப்பும் நபா்களுக்கு 25-ஆம் தேதி மாவட்ட தோ்தல் அதிகாரி பரிசு வழங்குவாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT