காரைக்கால்

‘உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்தில் திமுக பங்கேற்கும்’

19th Jan 2022 09:04 AM

ADVERTISEMENT

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்தில் திமுகவும் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்படும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் கூறினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

காரைக்காலில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுவை அரசோ, உள்ளாட்சித் துறையோ இதில் உரிய கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. ஊழியா்களுக்கு ஊதியம் இல்லை, ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்ற நிலை இனி தொடரக்கூடாது.

ADVERTISEMENT

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ளாட்சி ஊழியா்களுக்கு ஏதாவது ஒரு மாற்று வழியில் ஊதியம் வழங்கப்பட்டுவிடுகிறது. அதுபோல காரைக்கால் ஊழியா்களுக்கும் ஊதியம் கிடைக்கச் செய்யவேண்டும். அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்தில் நானும், திமுக நிா்வாகிகளும் பங்கேற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT