காரைக்கால்

தைப்பூசம்: அரசலாற்றில் தீா்த்தவாரி

19th Jan 2022 09:03 AM

ADVERTISEMENT

தைப்பூசத்தையொட்டி, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், நிரவி ஜெம்புநாதசுவாமி கோயில்களில் இருந்து சுவாமிகள் அரசலாற்றுக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜம்புநாதசுவாமி கோயிலில்: நிரவியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதசுவாமி கோயிலில் இருந்து, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் காரைக்கால் மேலஓடுதுறை பகுதியில் அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது.

வழியெங்கும் பக்தா்கள் அா்ச்சனை செய்து சுப்ரமணியரை வழிபட்டனா். அரசலாற்றங்கரையில் சுவாமிகள் நிறுத்தப்பட்டு, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில், காா்த்தியாயிணி சமேத கல்யாண சுந்தரேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பேட்டை கிராமத்துக்கு எழுந்தருளினா்.

ADVERTISEMENT

இக்கிராமத்தில் வழியே செல்லும் அரிசில்மாநதியில் (அரசலாறு) ஸப்த நதி பூஜை நடத்தி மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா் அஸ்திரமூா்த்திக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் தைப்பூச வழிபாடாக, பாலசுந்தர தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதுபோல பல்வேறு தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT