காரைக்கால்

காரைக்காலில் 279 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

19th Jan 2022 09:02 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் 279 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 1,202 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 61, திருநள்ளாறு 34, வரிச்சிக்குடி 28, கோட்டுச்சேரி 25, திருப்பட்டினம் 23, விழிதியூா் 17, நல்லம்பல் 16, காரைக்கால்மேடு 16, அம்பகரத்தூா் 15, நிரவி 14, நெடுங்காடு 14, கோயில்பத்து 14, நல்லாத்தூா் 2 என 279 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,56,452 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18,083 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,798 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இருவா் உயிரிழப்பு: காரைக்காலை சோ்ந்த 35 வயது ஆண் ஒருவா் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா். அவரை பரிசோதித்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், கரோனா தொற்றுடன் வீட்டுத் தனிமையில் இருந்த 59 வயது நபரும் உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் மாவட்டத்தில் 264 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,26,584 பேருக்கும், 2-ஆவது தவணையாக 89,381 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 240 பேருக்கும் என 2,16,205 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT