காரைக்கால்

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் பங்கேற்பு

12th Jan 2022 09:34 AM

ADVERTISEMENT

கோட்டுச்சேரி பகுதியில் ரூ. 41 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணியை புதுவை அமைச்சா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட அக்ரகாரத்தெரு, சோனியாகாந்தி நகா் பகுதியில் உள்ள சாலைகள் சிதிலமடைந்ததால், தாா்ச் சாலைகளாக தரம் உயா்த்த, 2019-20-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 41.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில், புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டாா்.

இச்சாலைப் பணிகள் 3 மாதத்துக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன், செயற்பொறியாளா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT